ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இனிப்பு, காரம், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சான்று பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் அல்லது பதிவு சான்று பெற வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார். தரம் குறைந்த மூலப்பொருள், கலப்பட பொருள், நிறமி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.