ஈரோடு: ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு ஈமெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பள்ளியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.