Thursday, February 29, 2024
Home » ஈரோடு – நெல்லை தினசரி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

ஈரோடு – நெல்லை தினசரி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

by Neethimaan

சென்னை: ஈரோடு-நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்வழித்தடத்தில் மதுரைக்கு செல்ல பகல் நேர ரயில்கள் இல்லை என்பது பெருங்குறையாகவே உள்ளது. வண்டி எண் 16846 நெல்லை – ஈரோடு ரயில் காலை 6:15 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு மதியம் 2:30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 16845 ஈரோடு – நெல்லை ரயில் மதியம் 1:35 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு நெல்லைக்கு இரவு 9:45 மணிக்கு வந்து சேர்கிறது. பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதி மக்களும் அதன் சுற்றுவட்டார மக்களும் பல்வேறு வேலை நிமித்தமாகவும், மதுரை உயர் நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கும் செல்வதற்கு ரயில்கள் இன்றி திண்டாடுகின்றனர். மேலும் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையும் அமைய உள்ளது. இதுவரை செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் நேரடியாக மதுரைக்கு ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டு பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனிடையே ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு-நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்; செங்கோட்டையில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில் (16846) ஈரோட்டை மதியம் 3 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று ரயில் சேவையை நீட்டித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

10 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi