சென்னை: ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குப்புராஜ், ஜெகதீஸ்வரன், மற்றும் சௌத்ரி ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.