ஈரோடு: ஈரோடு அருகே பர்கூர் மலைப்பகுதியில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. செட்டி நொடி என்ற பகுதியில் மண் சரிவு காரணமாக தமிழகம் கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.