ஈரோடு: ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் சிக்கி முதியவர் சுப்பிரமணி உயிரிழந்தார். இஸ்திரிபணி செய்து வந்த சுப்பிரமணி குடியிருப்புக்கு வந்து சென்றபோது லிப்டில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முதியவர் சுப்பிரமணி உயிரிழப்பு தொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.