Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முத்துகவுண்டன்பாளையத்தில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா

கோபி, மார்ச் 4: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள முத்துகவுண்டன் பாளையத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ரமேஷ்செல்வன் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், அன்னதானம் வழங்கிய துணை அமைப்பாளர் ரமேஷ் செல்வன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூர் கழக செயலாளர் ஆனந்தகுமார், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கடலூர் பழனிச்சாமி, தொமுச நிர்வாகி அண்ணாதுரை, ராஜ்குமார், அமானுல்லா, முத்துசாமி, சாதிக்பாட்ஷா, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.