ஈரோடு: காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தாயை மகளே தூக்கி சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். அன்றைய தினம் பணியில் இருந்து மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்த உள்ளார். மருத்துவமனை நுழைவாயிலேயே வீல் சேர், ஸ்ட்ரெட்சர் நிரந்தரமாக வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தாயை மகளே தூக்கி சென்ற சம்பவம்: அதிகாரி விசாரணை
83