ஈரோடு: தனியார் பள்ளிக்கு கடந்த திங்களன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்த இரு மாணவர்கள் விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள், பெற்றோர்களுக்கு காவல்துறையினர், பள்ளி நிர்வாகத்தினர் அறிவுரை கூறினார்கள். மீண்டும் இதேபோல் செயல்பட்டால் வழக்குப்பதியப்படும் என அறிவுறுத்தியுள்ளனர்.