ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை – விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில், 15 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில்
16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு வழங்கினார்.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பவானி வட்டம், ஜம்பையில் 59 இலட்சம் ரூபாய் செலவில் கால்நடை மருந்தகம்; கூட்டுறவுத் துறை சார்பில் சத்தியமங்கலம் வட்டம் கோணமூலை கிராமத்தில் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் 1000 மெ.டன் ஏலக்கூட கிடங்கு, கண்ணம்மாபுரத்தில் 16 இலட்சம் ரூபாய் செலவில் வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை அலுவலகக் கட்டடம், 51 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட முகாசிப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
கடன் சங்க அலுவலகக் கட்டடம்; நீர்வளத்துறை சார்பில் தாளவாடி வட்டம், மல்லன்குழி கிராமம், பீமராஜ் நகரில் 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மெட்டல்வாடி அருகில் 38 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, பைனாபுரம் கிராமம், தொட்டமுடுகரையில் 33 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மாதேஸ்வரன் கோவில் அருகில் 20 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில்
தரைப்பாலம் மற்றும் மண் சாலை; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அந்தியூர் வட்டம், கொண்டையம்பாளையம் கிராமத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சத்தியமங்கலம் வட்டம், பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10 கோடி ரூபாய்
செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையம்; வனத்துறை சார்பில் அந்தியூர் வனச்சரகம், கொங்காடை கிராமத்தில் 26 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை, கேர்மாளம் வனச்சரகம், கெத்தேசால் காவல் சுற்றில் 2 கி.மீ.-க்கு 10 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், கேர்மாளம் மேற்கு காவல் சுற்றில் 1 கி.மீ.-க்கு 5 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள யானை புகா அகழிகள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சியில் பொன்முடி ஆதிதிராவிடர் குடியிருப்பு கிராமத்தில் 25 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் விவசாய சேமிப்பு கிடங்கு, அந்தியூர் ஒன்றியம், நகலூர் ஊராட்சி, சோலைகர் காலனியில் 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம்; என மொத்தம் 15 கோடியே 70 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 136 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஜீரோ திரவ வெளியேற்ற (ZLD) அடிப்படையிலான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து, கட்டுமானப் பணிகள், இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் பணி;
நீர்வளத்துறை சார்பில் அணை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கீழ்பவானி அணை (பவானி சாகர் அணை) 19 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் 1 கோடியே 77 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் நீர்பாசன வசதிப் பணிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1 கோடியே 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 விவசாய சேமிப்பு கிடங்குகள் மற்றும் 6 கதிரடிக்கும் களங்கள்; என மொத்தம் 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2163 பயனாளிகளுக்கு 2 கோடியே 72 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், தமிழ்நாடு நீர்வள நில வள மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களில் நிதியுதவி;
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு 48 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேளாண் உட்கட்டமைப்பு நிதி, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வேளாண்மை கட்டமைப்பு நிதி, பொருளீட்டுக் கடன் ஆகிய திட்டங்களில் நிதியுதவி;
வேளாண் பொறியியல் துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு 16 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மானியத்துடன் வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்குதல், மானியத்துடன் கூடிய மின்மோட்டார்;
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 1256 பயனாளிக்ளுக்கு 9 கோடியே 24 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்;
தாட்கோ சார்பில் 23 பயனாளிகளுக்கு 40 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் Arise மற்றும் பிரதம மந்திரி அஜய் திட்டங்களில் உதவிகள்; கூட்டுறவுத் துறை சார்பில் 746 பயனாளிகளுக்கு 8 கோடியே 70 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்தியகாலக் கடன், கூட்டுப்பொறுப்பு குழுக் கடன் ஆகிய திட்டங்களில் கடனுதவி;
மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 1 கோடியே 58 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணை;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 200 பயனாளிகளுக்கு 58 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவனத்திற்கான சாஃப் கட்டர்கள்;
மீன்வளத்துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புறக்கடை அலங்கார மீன்வளர்ப்பு அலகுகள் மற்றும் மீனவ மகளிருக்கு அலைகள் திட்டத்தில் நுண்கடன்;
முன்னணி வங்கித் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு 88 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கிசான் கடன் அட்டைகள், விவசாய கால கடன்;
பட்டு வளர்ச்சித் துறை சார்பில் 53 பயனாளிகளுக்கு 51 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு மனை, தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தில் மல்பெரி நடவு, பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களுக்கான உதவிகள்; என மொத்தம் 25 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ. பிரகாஷ், கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. சந்திரகுமார், ஏ.ஜி. வெங்கடாசலம், பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வெ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் பா. முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப, சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன், இ.ஆ.ப. ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா,இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.