ஈரோடு: ஈரோட்டில் ரசாயன கழிவுகளை ஓடையில் வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து சட்டவிரோதமாக கழிவுநீரை ஓடையில் வெளியேற்றுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் செய்த ஆய்வில் ரசாயன கழிவுகள் ஓடையில் வெளியேற்றியது அம்பலமானது. இதனை அடுத்து, ஆலையின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோட்டில் ரசாயன கழிவுகளை வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு..!!
0