ஈரோடு இடைத்தேர்தலில் கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரி கே.பி.எம்.ராஜா என்பவரின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 இடைத்தேர்தலில் பின்பற்றப்பட்ட கொட்டகை பாணி நடப்பு இடைத்தேர்தலில் நடக்காமல் தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


