ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமணலில் புதர்மண்டி கிடைக்கும் தொல்லியல் அடையாள சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரையில் 2400 ஆண்டுகளுக்கு முன்பு பண்டை தமிழர் வாழ்ந்த கொடுமணலில் 1985-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாக அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. இதில் பெருங்கற்காலம் மற்றும் வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த கைமணிகள், சுடுமண் ஆபரணங்கள், தமிழ் எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், வளம் என எண்ணற்ற பொருட்கள் கிடைத்தன.
2400 ஆண்டுகளுக்கு முந்தைய இருப்பு உருகும் ஆலை, படி கற்களுடன் கூடிய கிணறு, பிறந்தவர்களுக்கான நினைவிட கைவளையங்கள் உள்ளிட்டவை இங்கு கண்டெடுக்கப்பட்டன. இங்கு அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் சாலையோரம் உள்ள நடுக்கல் மற்றும் சின்னங்கள் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தொல்லியல் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த வரலாற்று சின்னம் புதர் மண்டிய நிலையில் பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. 10 அடி உயரம் நடுகல் புள் புதரில் மறைந்துள்ளது. எனவே வரலாற்று அடையாளங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.