Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

உழவு என்பது தொழில் மட்டுமல்ல நமது பண்பாடு; தோளில் துண்டு போட்டுக்கிட்டு வேஷம் போடுற போலி விவசாயி நாங்கள் அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.15.7 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த பின் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; டெல்டா பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்க உள்ளேன். வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவின் மஞ்சள் மாநகரம் ஈரோடு: முதலமைச்சர்

ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மஞ்சள் மாநகரமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது.

81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.62,000 கோடி பயிர்க்கடன்: முதலமைச்சர்

தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்கள். 4 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியுள்ளோம்.

கூட்டுறவுத்துறை மூலம் ரூ.62,000 கோடி பயிர்க்கடன் 81 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு கொடுத்துள்ளோம். கரும்பு டன்னுக்கு ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.3150க்கு மேல் 349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குகிறோம். மண்ணூர் காத்து இன்னூயிர் காப்போம் திட்டம் மூலம் 22 லட்சம் விவசாயிங்கள் பயன்பெற்றுள்ளனர். சிறுதானியங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.

போலி விவசாயி அல்ல நாங்கள்: முதல்வர் ஸ்டாலின்

தோளில் துண்டு போட்டுக் கொண்டு வேஷம் போடும் போலி விவசாயி நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக நாங்கள் வந்து நிற்போம். உழவு என்பது நமது பண்பாடு, நிலத்தை 5ஆக வகைப்படுத்தியது நமது இனம். 125 உழவர்களை புதுப்பித்து 16 புதிய உழவர் சந்தைகளை திறந்துள்ளோம். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தால் 1045 ஏரிகள், குளங்கள் வளம்பெற்றுள்ளன.

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த ஆட்சி அதிமுக ஆட்சி: முதலமைச்சர்

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது அதிமுக ஆட்சி; அத்தகைய களைகள் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும். விவசாயிகள் தற்கொலைகள் கடந்த ஆட்சியில் அதிகமாக இருந்தது. 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பச்சை துரோகம் செய்தது அதிமுக. தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.