கோபி, டிச. 7: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கோபி மதுவிலக்கு போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சா கடத்திய ஈரோடு சூரம்பட்டி காந்திஜி வீதியை சேர்ந்த மதன்குமார் (26) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


