சென்னை: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. இப்போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ‘’சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்’’ மினி மாரத்தான் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி வெற்றி போர் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தர் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடைந்தது.
இதில் 18 வயது முதல் 40 வயது உடையவர்கள், மேலும் 40 வயது முதல் அதற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 5 கி.மீ வரை சென்று தன் திறமையினை வெளிக்காட்டிய ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும், பரிசுகளும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
18 வயது முதல் 40 வயது வரை போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆண்கள் முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 என வழங்கப்பட்டது. முதல் பரிசு சுனில், இரண்டாம் பரிசு ரோஸ்ரீத் ராமா, மூன்றாம் பரிசு ஜய்ஸ் பட்டில் பெற்றனர். ஆண்கள் பிரிவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 வழங்கப்பட்டது. முதல் பரிசை பாஸ்கர் கம்பெல், இரண்டாம் பரிசு அன்பரசு, மூன்றாம் பரிசு 5427 ராஜ்குமார் மயூயா பிடித்தனர்.18 வயது முதல் 40 வயது வரை போட்டியில் கலந்து கொண்டவர்களில் பெண்கள் முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 வழங்கப்பட்டது.
முதல் பரிசை அன்கிட்டபென் ரமேஷ்பாய், இரண்டாம் பரிசு லாதா, மூன்றாம் பரிசை அனுபிரியா பிடித்தனர். பெண்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் முதல் பரிசாக தலா ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 வழங்கப்பட்டது. முதல் பரிசை வசந்தியும், இரண்டாம் பரிசு ஷயமாலா, மூன்றாம் பரிசு நீலா பிடித்தனர். ஆண்கள் பிரிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காசோலை மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
பெண்கள் பிரிவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காசோலை மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார். பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்யபிரதசாகு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க.நந்தக்குமார், கூடுதல் பதிவாளர் (நுகர்வு பணிகள்) ச.பா.அம்ரித், மேயர் ஆர்.பிரியா, ஆகியோர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள், உள்ளிட்ட அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.