Friday, April 19, 2024
Home » நா கூசும் வார்த்தைகளால் ஆபாச அர்ச்சனை புகழேந்தியை தாக்க முயன்ற இபிஎஸ் ஆதரவாளர்கள்: காரை மறித்து அட்டகாசம்

நா கூசும் வார்த்தைகளால் ஆபாச அர்ச்சனை புகழேந்தியை தாக்க முயன்ற இபிஎஸ் ஆதரவாளர்கள்: காரை மறித்து அட்டகாசம்

by Ranjith

சேலம்: சேலம் இடைப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தியை, அதிமுகவினர் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதில் அந்த அணியின் முக்கிய தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜேசிடி பிரபாகர், கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை வரவேற்று அதிமுக கொடிகள் கட்டப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாநகரிலும், இடைப்பாடியிலும் கொடிகளை பிடுங்கி வீசினர்.

இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு உருவானது. இடைப்பாடியில் இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காரில் டிரைவருடன் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தியை, அதிமுகவினர் வழிமறித்து காரை நிறுத்தி, நா கூசும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான இடைப்பாடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பெங்களூரு புகழேந்தி மீது, இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

11 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi