புதுடெல்லி: நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மதிப்பை உறுதி செய்வோம் என ரக்ஷ பந்தனை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரக்சா பந்தன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள பிணைப்பை கொண்டாடும் பண்டிகையாக ரக்சா பந்தன் பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரக்சா பந்தனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
குடியரசுத் தலைவர் எக்ஸ் வலைதள பதிவில்:
இந்த ரக்சா பந்தன் நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். சகோதர சகோதரிகளிடையே அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை உணர்வை அடிப்படையாக கொண்ட இந்த பண்டிகை, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசம் மற்றும் மதிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த பண்டிகை தினத்தில், நம்முடைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மதிப்பை உறுதி செய்வோம் என நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.