திருவொற்றியூர்:எண்ணூரில் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற தனியார் உர தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூலப்பொருள் குழாய் வெடித்ததில் அம்மோனியா வாயு கசிந்து எண்ணூர் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று விடு திரும்பினர். பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளின் பேரில் சில மாதங்களாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.ஆனால் நிறுவன அதிகாரிகள் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசியவில்லை. இது வதந்தி என்றனர்.