சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20போட்டி நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில், பென் டக்கெட் 46 பந்தில் 84, ஜேமி ஸ்மித் 26 பந்தில் 60, பட்லர் 22, கேப்டன் ஹாரி புரூக் நாட் அவுட்டாக 35, ஜேக்கப் பெத்தேல் 36 ரன் அடித்தனர். 20 ஓவரில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன் குவித்தது.
பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் ரோவ்மேன் பவல் நாட் அவுட்டாக 45 பந்தில் 79, கேப்டன் ஷாய் ஹோப் 45, ஹெட்மயர் 26, ஹேசன் ஹோல்டர் 25 ரன் அடித்தனர். 20 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களே எடுத்தது. இதனால் 37ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் லூக் வூட் 3, அடில் ரஷித் 2 விக்கெட் எடுத்தனர். முதல் 2 போட்டியிலும் வென்றிருந்த இங்கிலாந்து 3-0 என தொடரை கைப்பற்றி வெஸ்ட்இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. பென் டக்கெட் ஆட்டநாயகன் விருதும், பட்லர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.