லண்டன்: இந்தியாவிற்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 14 வீரர்கள் கொண்ட அந்த அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். 31 வயதான ஜேமி ஓவர்டன், கடந்த 2022 ஜூன் மாதத்திற்கு பிறகு, அதாவது 3 ஆண்டுக்கு பின் அணியில் இடம் பிடித்திருக்கிறார். முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், சாக் கிராலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (வி.கீ.), ஜோஷ் டோங்கு, கிறிஸ் வோக்ஸ்.
இந்தியாவுடன் டெஸ்ட் இங்கி. அணி அறிவிப்பு
0
previous post