சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டி.20 மற்றும் ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்கான அணி வரும் 12ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் டி.20 அணிக்கு சூர்யகுமார் யாதவும், ஒரு நாள் மற்றும் சாம்பியன் டிராபிக்கு ரோகித்சர்மா கேப்டனாக தொடர உள்ளனர். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் நிலையில் முகமதுசிராஜ் அணியில் இடம்பிடிக்கிறார்.
இதனிடையே ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படும் கே.எல்.ராகுல், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு கேட்டு விலகி உள்ளார். அவரின் மனைவி அதியாஷெட்டி கர்ப்பமாக உள்ள நிலையில், பிரசவத்தின் போது உடன் இருப்பதற்காக அவர் விலகி உள்ளார். இருப்பினும் அவர் சாம்பியன் டிராபியில் இடம் பிடிப்பது உறுதியாகி இருக்கிறது.