லண்டன்: இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் நகரில் வசித்தவர் நீலா படேல்(56). இந்திய வம்சாவளியான இவர் கடந்த வாரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் அவர் மீது சரமாரியாக அடித்து உதைத்தார் இதில் பலத்த காயமடைந்த நீலா படேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு விசாரித்த போலீசார் மைக்கேல் சுவுமேக்கா(23) என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். நிீலா படேலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது. போதை பொருளை சப்ளை செய்தது. அவசர பிரிவு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.