நாட்டிங்காம்: இங்கிலாந்து மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியா, 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நாட்டிங்காம் நகரில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி முதலில் களமிறங்கியது.
துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 112 ரன் (3 சிக்சர், 15 பவுண்டரி) குவித்தார். டி20 போட்டிகளில், இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 20 ஓவர் முடிவில் இந்தியா 210 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து, 14.5 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், இந்தியா 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.