மான்செஸ்டர்: இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தனஞ்ஜெயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணி, காயம் காரணமாக சற்று பலவீனம் அடைந்துள்ள இங்கிலாந்து அணியின் சவாலை சந்திக்கிறது.
வெஸ்ட் இண்டீசுடன் நடந்த 3வது டெஸ்டில் ஸாக் கிராவ்லி கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக விலகிய நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தசைநார் காயத்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அனுபவம் இல்லாத தொடக்க வீரர் டான் லாரன்ஸ், அனுபவம் இல்லாத கேப்டன் ஓல்லி போப் என இங்கிலாந்து இக்கட்டான நிலையில் உள்ளது. ஆனாலும், உள்ளூர் ஆடுகளங்களின் தன்மை பற்றி நன்கு அறிந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து: 1.டேன் லாரன்ஸ், 2.பென் டக்கெட், 3.ஓல்லி போப் (கேப்டன்), 4.ஜோ ரூட், 5.ஹாரி புரூக் (துணை கேப்டன்), 6.ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), 7.கிறிஸ் வோக்ஸ், 8.கஸ் அட்கின்சன், 9.மேத்யூ பாட்ஸ், 10.மார்க் வுட், 11.ஷோயிப் பஷிர்.இலங்கை: 1.திமத் கருணரத்னே, 2.நிஷான் மதுஷ்கா, 3.குசால் மெண்டிஸ், 4.ஏஞ்சலோ மேத்யூஸ், 5.தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), 6. தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), 7.கமிந்து மெண்டிஸ், 8.பிரபாத் ஜெயசூரியா, 9.அசிதா பெர்னாண்டோ, 10.விஷ்வா பெர்னாண்டோ, 11.மிலன் ரத்னாயகே.