Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறியியல் படிப்புக்கு மே 7ம் தேதியில் இருந்து இன்று (ஜூன் 1) வரை 2, 76, 724 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் படிப்புக்கு மே 7ம் தேதியில் இருந்து இன்று (ஜூன் 1) வரை 2, 76, 724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தபடி பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கடந்தாண்டு 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு மே 7ம் தேதியில் இருந்து இன்று (ஜூன் 1) வரை 2, 76, 724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தகைய விண்ணப்பிப்பதிவு மாணவர்கள் இடையே பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.