சென்னை: பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ல் தொடங்குகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஜூலை 14ல் தொடங்கி ஆகஸ்ட் 17ல் முடிவடைகிறது. மாநில அளவில் பொறியியல் தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடம் பிடித்துள்ளார். பொறியியல் பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா 2ம் இடமும் பொறியியல் பொதுப்பிரிவு தரவரிசை பட்டியலில் அமலன் ஆன்டோ என்பவர் 3ம் இடமும் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ல் தொடக்கம்: அமைச்சர் கோவி. செழியன்
0