தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 371 இன்ஜினியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தேர்வு: TNPSC- Combined Engineering Services Examination-2023.
பணியிடங்கள் விவரம்:
1. Principal, Industrial Training Institute/Asst.Director of Training: 1 இடம் (பொது) (மாற்றுத்திறனாளி). சம்பளம்: ரூ.56,100-2,05,700. தகுதி: பி.இ., தேர்ச்சி.
2. Assistant Engineer (Civil) (water resources Dept-PWD): 4 இடங்கள் (எஸ்சி பெண்-1, பிசி பெண்-1 பொது-2) இவை அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., தேர்ச்சி
3. Assistant Engineer (Civil) (PWD): 5 இடங்கள் ( எஸ்சி பொது-1, எஸ்சி பெண்-1, எமபிசி பொது-1, எம்பிசி பெண்-1, பொது-1). இந்த பணியிடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
4. Assistant Engineer (Rural Development and Panchayat Raj)- 1 இடம் (எஸ்சி பெண்) – மாற்றுத்திறனாளி. தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
5. Assistant Engineer (Highways): 53 இடங்கள் (பொது பெண்)- மாற்றுத்திறனாளி. தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., அல்லது ஏஎம்ஐஇ தேர்ச்சி.
6. Assistant Engineer (Agricultural Engineering): 1 பிசி (பொது)- மாற்றுத்திறனாளி. தகுதி: வேளாண்மை பாடத்தில் பி.இ அல்லது பி.டெக் அல்லது பிஎஸ்சி அல்லது மெக்கானிக்கல்/சிவில்/ஆட்டோ மொபைல்/ புரடக்ஷன் இன்ஜினியரிங்/ இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் மற்றும் புரடக்ஷன் இன்ஜினியரிங் பாடங்களி் பி.இ., அல்லது பி.டெக்., இடஒதுக்கீடு விவரம் பின்னர் அறிவிக்கப்படக் கூடிய பணிகள்
7. Assistant Director of Industrial Safety & Health: 20 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/கெமிக்கல்/டெக்ஸ்டைல் டெக்னாலஜி/ இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/புரடக்ஷன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
8. Assistant Engineer (Industries): 9 இடங்கள். தகுதி: சிவில் மற்றும் ஆர்கிடெக்ட் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அல்லது பி.டெக்.,
8-A: Assistant Engineer (Electrical) (PWD): 36 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்கில் பி.இ,
9. Senior Officer (Technical) (TIIC): 8 இடங்கள். தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ஏஎம்ஐஇ.
10. Assistant Engineer (Electrical) (TANGEDCO): 36 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடங்களில் பி.இ., அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் ஏஎம்ஐஇ.
11. Assistant Engineer (Civil): 5 இடங்கள். தகுதி: சிவில் பாடத்தில் பி.இ அல்லது ஏஎம்ஐஇ.
12. Assistant Engineer ( Mechanical): 9 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ அல்லது ஏஎம்ஐஇ.
13. Assistant Engineer (Civil): 1 இடம். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது ஏஎம்ஐஇ.
14. Assistant Engineer (Pollution Control): 49 இடங்கள். தகுதி: சிவில்/கெமிக்கல்/சுற்றச்சூழல்/ ஆகிய பாடங்களில் எம்இ அல்லது எம்டெக் அல்லது பெட்ரோலியல் ரீபைனிங் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் பாடத்தில் எம்டெக்.,
15. Assistant Engineer: (Civil): 78 இடங்கள். தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., பொது நலவாழ்வு பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
16. Assistant Engineer (Mechanical): 20 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ.,
17. Manager (Engineering) (TNCMPFL): 7 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ஆட்ேடாமொபைல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் பி.இ.,
18. Manager (Civil) (TNCMPFL): 1 இடம். தகுதி: சிவில் பாடத்தில் பி.இ.,
19. Assistant Engineer: (Civil): 25 இடங்கள். தகுதி: சிவில் பாடத்தில் பி.இ.,
கட்டணம்: பொது பிரிவினருக்கு பதிவு கட்டணம்- ரூ.150/-. தேர்வு கட்டணம்: ₹200.- இதை நெட் பேங்கிங் மூலம் செலுத்தவும்.
தேர்வு மையங்கள்: அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகர்கோவில், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 37 மையங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in/www.tnpsc.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.11.2023.