Tuesday, November 28, 2023
Home » பொறியியல் மாணவர் சேர்க்கை துணை கலந்தாய்வு மூலம் 10 ஆயிரம் இடங்கள் நிரம்பின

பொறியியல் மாணவர் சேர்க்கை துணை கலந்தாய்வு மூலம் 10 ஆயிரம் இடங்கள் நிரம்பின

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சிறப்பு பிரிவில் 775 இடங்கள் நிரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான முதற்கட்ட பொது கலந்தாய்வு 3 சுற்றுகளாக கடந்த 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் சுமார் ஒரு லட்சம் இடங்கள் நிரம்பியதாக சொல்லப்பட்டன.

இதையடுத்து முதற்கட்ட பொது கலந்தாய்வில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், 12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஏதுவாக துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க 17 ஆயிரத்து 710 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதில் பொதுப் பிரிவில் 10 ஆயிரத்து 295 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 926 பேரும் விருப்ப இடங்களை தேர்வு செய்து இருந்தனர். அவர்களில் பொதுப் பிரிவில் 9 ஆயிரத்து 809 இடங்களும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 470 இடங்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 279 இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களை உறுதி செய்யும் மாணவர்களின் இறுதி பட்டியல் இன்று (சனிக்கிழமை) வெளியாகும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களில், முதற்கட்ட பொது கலந்தாய்வில் சுமார் 1 லட்சம் இடங்களும், தற்போது துணை கலந்தாய்வில் சுமார் 10 ஆயிரம் இடங்களும் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களை நிரப்ப அடுத்தகட்ட கலந்தாய்வு எதுவும் நடத்தப்படுமா என்பது குறித்த தகவலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு இதுவரை உறுதி செய்யவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் காலியாக உள்ளன.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?