சென்னை: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த ஜெயவேல் – அருணா தம்பதியின் மகள் சகஸ்ரா, தமிழகத்தில் மாநில அளவில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.இதுகுறித்து, மாணவி சகஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தை பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இசிஇ பொறியியல் படிக்கலாம் என்று நினைக்கிறேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, பிறகு வருங்காலத்தில் ஐஏஎஸ் படிக்க ஆசையாக உள்ளது. எனது படிப்புக்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி.