சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 90 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 337 மாணவர்களும், 1 லட்சத்து 05 ஆயிரத்து 395 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். விண்ணப்ப பதிவு செய்வதற்கு வருகிற 6ம் தேதி (நாளை) கடைசி நாளாகும். எனவே பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை விரைவில் பதிவு செய்துகொள்ளுமாறும், விண்ணப்ப பதிவு செய்தவர்கள் தங்களது சான்றிதழ்களை 9ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
0