சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.