சென்னை: இன்ஜினியரிங் துணை கலந்தாய்வுக்கு வரும் செப்டம்பர் 3ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் இருக்கின்றன. இதற்கான இடங்கள் 3 சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. அதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து வருகிற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மற்றும் தொழிற் கல்வி பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் 2023 பொதுக் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத முடியாத மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.hov.in என்ற இணையதளம் மூலமாக செப்டம்பர் 3ம் தேதி வரை துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.