சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: கடந்த 7ம் தேதி தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,20,807 மாணவர்களும் 1,00,579 மாணவிகளும் ஆக மொத்தம் 2,21,386 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள். வரும் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்ய காலம் உள்ளதால் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணவர் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
பொறியியல் மாணவர் சேர்க்கை 2.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு
0