நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சமாதானபுரம், காந்திநகரைச் சேர்ந்த டைட்டஸ் ரோட்ரிகோ, பொதுப்பணித்துறையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் காட்லி மேக்ஸ்டன் ரோட்ரிகோ (29). பிஇ சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கட்டிட கான்ட்ராக்டராக இருந்தார். இவருக்கு மனைவியும், கைக்குழந்தையும் உள்ளனர். நேற்று காலை காட்லி மேக்ஸ்டன் ரோட்ரிகோ, நண்பர்கள் 8 பேருடன் காரில் மருதூர் அணைக்கு சென்று குளித்துள்ளார். அப்போது காட்லி மேக்ஸ்டன் ரோட்ரிகோ ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பலியானார்.