சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: மோடி அரசு. திமுகவை பலவீனப்படுத்தி விடலாம் என்று கனவு கண்டு அந்த கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாஜ இந்த தகுடுதத்தம் வேலைகள் மூலம் அமைச்சர் எ.வ.வேலுவை, திமுகவை ஒடுக்கி விட முடியாது.ஆளுநர் ரவி, அண்ணாமலை, அரசு எந்திரங்கள் என்று வரிசை கட்டி திமுகவை வீழ்த்திட சோதனைகள் அனைத்தும் திமுகவிற்கு பலம் சேர்ப்பவையாகவே அமைந்து வருகிறது. காரணம், இந்த இழிவான அநீதியான செயல்களை மக்கள் கண்டு முகம் சுளித்து வருவதை இந்த நாடு அறியும். மோடி – அமித்ஷா கூட்டு சதியான அற்ப அரசியல் ஆதாயத்திற்காக அரசின் நிறுவனங்களை பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது.