ஜெய்ப்பூர்: சீட்டு கம்பெனி மோசடி வழக்கை முடித்து வைப்பதற்கு ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்க துறை அதிகாரி உட்பட 2 பேரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம், விமல்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் நவல்கிஷோர் மீனா. இவர் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமலாக்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மணிப்பூரில் நடந்த சீட்டு கம்பெனி மோசடி வழக்கை முடித்து வைப்பதற்காக அதிகாரி நவல் கிஷோர் ரூ.17 லட்சம் கேட்டுள்ளார்.
ராஜஸ்தானில் வைத்து லஞ்ச பணத்தை பெற நவல்கிஷோர் திட்டமிட்டார். இது குறித்து ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு சீட்டு கம்பெனி உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். நேற்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இடத்தில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரி நவல் கிஷோர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் பாபுலால் மீனா ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.