கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து, கல்வித் துறை, ஆளும் திரிணாமுல் தலைவர்கள் பலரை கைது செய்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா, அலிப்பூரில் அரசியல் கட்சி பிரமுகரும் இந்த ஊழல் வழக்கில் கைதாகி இருப்பவருமான சுஜோய் கிருஷ்ணா பாத்ராவுக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மற்றும் பாபானிபூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஆசிரியர் பணி நியமன ஊழலில் இந்நிறுவனத்தின் மூலம் நடந்த பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை தேடி இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.