புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜராக கவிதாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கைது செய்வதை தவிர்க்க கவிதா உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதான்சு துலியா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதா ஆஜராக 10 நாட்கள் கால அவகாசம் அளிக்க அமலாக்கத்துறை வக்கீல் சம்மதித்தார்.