புதுடெல்லி; ஐக்கிய அரசு எமிரேட்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் பெட்டிங் ஆப் ஒரே நாளில் ரூ.200 கோடி பணமாக செலுத்தியது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நடிகர் ரன்பீர் கபீரை இன்று ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் நடிகர் கபில் சர்மா, நடிகைகள் ஹுமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இவர்கள் அனைவரும் ராய்ப்பூர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.