சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி கடந்த 19ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் முடிந்து நேற்று ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா என்று ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இல்லை என்று ஜாபர் சாதிக் என்று பதிலளித்தார். இதையடுத்து, வரும் 29ம் தேதிவரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.