Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ரூ.2.78 கோடி பெற்ற விவகாரம்; பினராயி விஜயன் மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை: 9 மணி நேரம் நடந்தது

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு கொச்சி தாது மணல் நிறுவனமான சிஎம்ஆர்எல் முறைகேடாக ரூ.2.78 கோடி பணம் கொடுத்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையும், தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக வீணா விஜயன் நேற்று காலை 10.30 மணிக்கு கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வீணா விஜயன் ஆஜரானார். அவரிடம் 11 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கு என்னென்ன சேவைகள் வழங்கப்பட்டன, அதற்கான ஆவணங்கள் உள்பட விவரங்களை அமலாக்கத்துறை வீணா விஜயனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இரவு 8 மணி வரை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன்பிறகு வீணா விஜயனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விடுவித்தனர்.