Saturday, March 2, 2024
Home » பாஜவுக்கு முடிவு காலம் தொடங்கி விட்டது: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் கருத்து

பாஜவுக்கு முடிவு காலம் தொடங்கி விட்டது: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் கருத்து

by Francis

லக்னோ: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் டிவிட்டரில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் பாஜ பின்தங்கியுள்ளது. தோல்வி அடையும் என்ற அச்சத்தில் பாஜ சார்பில் போட்டியிட தயங்குகின்றனர். பிற்படுத்தப்பட்டோர்,தலித்துகள்,சிறுபான்மையினருக்காக சமாஜ்வாடி கட்சி போராடுகிறது. இந்த சமுதாய மக்களிடம் நடத்திய கருத்து கணிப்பில்,பிற்படுத்தப்பட்டோர் 49% சதவீதம்,தலித்துகள் 16%, சிறுபான்மையினர் 21 %, உயர் ஜாதியினர் 4 % தங்களுடைய ஓட்டு சமாஜ்வாடிக்கு என தெரிவித்துள்ளனர். இந்த மூன்று பிரிவினரும் ஒன்றுபட்டு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணியின் காரணமாக முந்தைய தேர்தல்களை போல் பாஜவால் உத்திகள் எதுவும் வகுக்க முடியவில்லை.பாஜ சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. மணிப்பூர் கலவரம்,மல்யுத்த வீராங்கனைகளுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் காரணமாக பெண்களும் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

மற்றும் பெண்களுக்கு எதிராக நடந்த பல சம்பவங்களால் அரசு மீது கோபத்தில் உள்ளனர். வேலை கிடைக்காததால் இளைஞர்கள் பாஜவை ஆட்சியில் இருந்து அற்றுவதற்கு வாக்கு செலுத்த தயாராகி விட்டனர். அவர்களுடைய செயல்பாடுகளினால் கட்சியின் வாக்கு கடுமையாக குறையும். பாஜ தலைவர்களாலே அந்த கட்சிக்கு தோல்வி ஏற்படும். பல போலியான வாக்குறுதிகளால் விவசாயிகள் இடையே பாஜவுக்கு கடும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. வியாபாரிகள், சிறுவணிகர்கள், ஆலை உரிமையாளர்கள் பாஜவின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தனர். தவறான ஜிஎஸ்டி நிர்வாகத்தினால் வணிகர்களும் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

You may also like

Leave a Comment

18 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi