பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு அம்மாள் தெருவில் வசிக்கும் தனிநபர் ஒருவர் கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து மழைநீர் செல்லும் பாதையை அடைத்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி வடிவதற்கு இடமில்லாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீரும் இதனோடு கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து 15வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் பரிமளா அருண்குமார் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் சாஹ சங்கேத் பல்வத்திடம் புகார் மனு அளித்தார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக சப் – கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
கால்வாய் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
23
previous post