சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க எத்தனை குழுக்கள் உள்ளன? அவை முறையாக கண்காணிக்கிறதா?. “எத்தனை ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன, அவற்றில் எத்தனை ஏக்கர் நீர்நிலைகள்? உள்ளன என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.