சென்னை: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி, வளமான தமிழ்நாட்டை நோக்கி நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,474 பணி ஆணையகளை வழங்கி உள்ளோம். 946 மருந்தாளுநர்கள், 523 உதவியாளர்கள், 5 வழிகாட்டி ஆலோசகர்களுக்கு பணி ஆணை வழங்கி உள்ளோம் என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.