கன்னியாகுமரி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 10 பேர் நேற்று காலை கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அங்குள்ள சன் செட் பாயின்ட் பகுதிக்கு சென்ற அவர்கள் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை அவர்களை இழுத்துச்சென்றது. மற்றவர்கள் தப்பித்துக்கொள்ள 3 பேர் மட்டும் மாயமாகினர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் இறங்கி 3 பேரையும் மீட்டனர். அதில், சுரேஷ்(32), மணி(30) ஆகியோர் இறந்துவிட்டனர். பிந்து (28) என்ற பெண் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.