மதுரை: அவசர அறுவை சிகிச்சைகளை மட்டும் புறக்கணித்து நாளை முதல் கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவ ஆவணங்களை திருந்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாளை முதல் மாநில அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத், மகப்பேறு வார்டுகள் நுழைந்து பணிசெய்ய விடாமல் தடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.