சென்னை; மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். ரூ.5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசரகால -செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.