டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகக்கூறி தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி வழக்கு செப்.21-ல் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது.